உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒரு குடி நோயாளி 200 பேரை மன நோயாளியாக மாற்றுகிறார்

ஒரு குடி நோயாளி 200 பேரை மன நோயாளியாக மாற்றுகிறார்

கோத்தகிரி; நேரு யுவகேந்திரா சார்பில், கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில், புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ராயர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:புகையிலை பொருட்கள் பயன்படுத்துவரின் இதயம், மூளை, நரம்பு மண்டலம் போன்ற உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கிறது. ஒரு சிகரெட் புகையில், 4,000 வேதிப்பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில், உள்ள தார் மூச்சு குழாய்களின் பக்கவாட்டில் ஒட்டிகொண்டு, நாளடைவில் மாரடைப்பை ஏற்படுத்துகிறது.நிக்கோடின் என்ற பொருள், மூளையில் மகிழ்ச்சிக்கு காரணமான, 'டோபோ மைன்' என்ற சுரப்பியை அதிகளவில் சுரக்க செய்து, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைப்படுத்துகிறது. புற்றுநோய், சர்க்கரை, மற்றும் கேங்கரின் எனப்படும் தோல் அழுகல் போன்ற பல நோய்களை வழங்குகிறது.இதை தவிர, நம்மில் சாதாரணமாக குடிப்பவர்களில் ஐந்தில், இரண்டு பேரை குடி நோயாளிகளாக மாற்றுகிறது. மதுவில் உள்ள எத்தனால் என்ற திரவம், ஒருவரை குடி நோயாளி ஆக்குகிறது. 'ஒரு குடி நோயாளி, 200 பேரை மன நோயாளியாக மாற்றுவார்,' என, மருத்துவ ஆய்வு கூறுகிறது.புகைப்பவர் தான் மட்டுமல்ல, தன் அருகிலுள்ள புகைக்காதவர்களையும் புற்று நோய்க்கு உள்ளாக்குகிறார். குடிப்பழக்கம் தனது சந்ததியரையும் குடி நோயாளியாக மாற்றுகிறது.இதனால், மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த போதைக்கும் அடிமையாக கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், சமூக சேவகர் பால் ஜோசப், புகைப்பதன் தீமை குறித்து, மாணவர்களுக்கு குறும்படம் திரையிட்டு விளக்கம் அளித்தார். நேரு யுவகேந்திரா வட்டார செயலாளர் சத்திய சீலன், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ