உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கூடலுார்: நடுவட்டம் அருகே, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த புகார் தொடர்பாக ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். நடுவட்டம், டி.ஆர்., பஜார் அருகே உள்ள, கிராமத்தில் வசிக்கும், 14 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த, 25 வயது இளைஞர், ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, பைக்காரா போலீசார் வழக்கு பதிவு செய்து, இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !