உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் போடப்பட்ட நடைபாதை வேஸ்ட்

ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் போடப்பட்ட நடைபாதை வேஸ்ட்

ஊட்டி;ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் போடப்பட்ட நடைபாதை, பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் வீணாகி வருகிறது.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, ஏ.டி.சி., பஸ் நிறுத்தத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் வருகை இருந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, இவ்வழியாக சென்று வர வேண்டும் என்பதால், வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.மக்கள் நடந்து செல்லும் போது, விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளதால், ஏ.டி.சி., - பி.எஸ்., தனியார் மருத்துவமனை வரை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தை ஒட்டி, கழிவுநீர் கால்வாய் மேல், புதிய நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடை பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு, அதன் ஓரத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி, மக்களுக்கு பயன் இல்லாமல் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், நடைபாதையை பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை