கிருஷ்ணாபுரம் பாலம் அருகே பள்ளம்; முழுமையாக சீரமைக்காததால் பாதிப்பு
குன்னுார்; குன்னுார் கிருஷ்ணாபுரம் பகுதியில் பாலத்தின் அருகே, ஏற்பட்ட பள்ளம் முழுமையாக சீரமைக்காமல் விடபட்டுள்ளதால் மீண்டும் குடியிருப்புகளுக்கு செல்லும் பகுதி துண்டிக்கும் அபாயம் உள்ளது.குன்னுார் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த டிச., மாதம் பெய்த கன மழையின் போது, ஆற்றின் பாலத்தின் அருகிலேயே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு மக்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் பகுதி துண்டிக்கப்படும் அபாயம் இருந்தது.இதன் பேரில், அப்போது அங்கு ஆய்வு மேற்கொண்ட ஆளும் கட்சியினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.தொடர்ந்து, பெயரளவிற்கு மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. எனினும், தற்போது மழை இல்லாத நிலையிலும், சிறிது, சிறிதாக மீண்டும் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. மழை காலங்களில் மீண்டும் முழுமையாக இந்த பகுதி துண்டிக்கும் அபாயம் உள்ளது. மக்கள் கூறுகையில்,'குன்னுார் நகராட்சியில் ஆளும் கட்சியினரின் வீடுகளுக்கு செல்லும் ஆற்றோர பாதையில் ஏற்பட்ட மண்சரிவு உடனடியாக நிதி ஒதுக்கி சீரமைக்கப்பட்டது. ஆனால், இதன் அருகிலேயே மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு செல்லும் பாலத்தின் அருகே ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க நிதி ஒதுக்காமல். பெயரளவிற்கு மண் மூட்டைகள் அடுக்கப்பட்டது. எனவே மழை காலம் துவங்கும் முன்பு நிதி ஒதுக்கி, இந்த பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும்,'' என்றனர்.