மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
பந்தலுார் : பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசியதாவது:மக்களின் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றி தர முடியாத நிலையில் தான் ஆளும் கட்சி செயல்படுகிறது. மக்கள் தங்களின் தேவைகளுக்காக போராடி பெற வேண்டிய நிலையே தொடர்கின்றது. சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை பாழ்படுத்தும் வகையிலான சட்டங்களை செயல்படுத்துவதற்கு, திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. பணத்திற்கு தங்கள் ஓட்டுகளை விற்பனை செய்யும் நிலை மாற வேண்டும். சுயமரியாதை இழந்து, ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் அவலத்தை தடுக்க வேண்டும். எனவே, மாற்றம் ஏற்பட நாம் தமிழருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பொறுப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025