ஓணம் கொண்டாட்டம் நடனமாடிய மாணவிகள்
குன்னுார்:குன்னுார், பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில்ஆடல் பாடல்களுடன் மாணவியர் ஓணம் கொண்டாடினர்.கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அத்தம் திருவிழா நேற்று துவங்கிய நிலையில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகளிலும், பூக்கோலமிட்டு வழிபட்டு வரவேற்கின்றனர்.இந்நிலையில், நேற்று குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் மாணவியர் சார்பில், கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்த மாணவியர் மாவேலியை வரவேற்கும் விதமாக பூக்கோலமிட்டனர். தொடர்ந்து, பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப மாணவிகள் நடனம் ஆடினர்.