ஆசிரியர்கள் போராட்டம் மாணவர்கள் பாதிப்பு
பந்தலுார்;தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 'பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.இதனால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். கூடலுார் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மொத்தம், 424 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், 202 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், அம்பலவயல் உட்பட சில அரசு துவக்கப் பள்ளிகளில், பணியாற்றிய சில தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே அறையில் அமர வைத்து பாடங்களை நடத்தினர்.