உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூமிக்கு வைத்தியம் பார்க்க யாரும் இல்லை காலநிலை மாற்றம் கருத்தரங்கில் வருத்தம்

பூமிக்கு வைத்தியம் பார்க்க யாரும் இல்லை காலநிலை மாற்றம் கருத்தரங்கில் வருத்தம்

ஊட்டி;ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பசுமை படை சார்பாக, காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது: கடந்த, 150 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணமாக, பூமியில் பசுமைக்குடில் வாயுவின் அளவு பூமியின் தாங்கு திறனை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, பூமியின் வெப்பநிலை, ஒரு டிகிரிக்கு மேலாக அதிகரித்துள்ளது. நமக்கு காய்ச்சல் வந்தால் மருத்துவர்கள் உள்ளனர். பூமிக்கு வைத்தியம் பார்க்க எந்த மருத்துவர்களும் இல்லை.முன்னோர்கள் நமக்கு கொடுத்த இந்த பூமியை, வருங்கால சந்ததியினருக்கு கொடுக்க வேண்டியது நமது கடமை. வளர்ச்சி என்ற பெயரில், மனிதகுலம் இயற்கையை சூறையாடி வருவது தடுக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில், இயற்கை நம்மை திருப்பித் தாக்கும். இதைத்தான் அண்மையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது நாம் அனுபவித்தோம். இனிமேல், பூமியில் அதிக புயல்கள், வெள்ளப்பெருக்கு, வறட்சி மற்றும் தொற்று நோய்களின் பெருக்கம் அன்றாட வாழ்வாக போகிறது. இந்த பூமியை காக்க, போர்க்கால அடிப்படையில் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ராஜூ பேசினார்.நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன், பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் மற்றும் ஊட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி