உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை நீர் வடிகால் வசதி இல்லை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு

மழை நீர் வடிகால் வசதி இல்லை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு

குன்னுார்; குன்னுார் முத்தாலம்மன் பேட்டையில், மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.குன்னுார் முத்தாலம்மன் பேட்டை நிழற்குடை அருகே, எம்.எல்.ஏ., நிதியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதன் அருகிலேயே நகராட்சியின் இடத்தில் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கால்வாயில் மழை நீர் செல்ல முடியாததால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், சுலோச்சனா என்பவரின் வீட்டில் வெள்ளம் புகுந்தது. இரவில் அருகே இருந்த வீட்டில் தங்கினார்.இப் பகுதி மக்கள் கூறுகையில், 'மழை நீர் செல்ல வசதிகள் ஏற்படுத்தாத நிலையில், சமுதாய கூடம், தடுப்பு சுவர் பணியும் தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கி நின்று பள்ளமும் ஏற்பட்டுள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி