உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை பொருகள் கடத்திய மூவர் கைது

போதை பொருகள் கடத்திய மூவர் கைது

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், செர்ப்புளச்சேரி போலீசார் நேற்று காலை இடுதரை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில், 1.88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில், செர்ப்புளச்சேரியை சேர்ந்த முகமது ஹாரிஸ், 29, முகமது ஆஷிப், 28, பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த முகமது ஆஷிக், 23, என்பதும் தெரியவந்தது. இதில் முகமது ஆஷிப், ஏற்கனவே கொழிஞ்சாம்பாறை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், அந்த வழக்கில் சிறையில் இருந்தவர், கடந்த மே 23ம் தேதி தான் ஜாமினில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதேபோல், முகமது ஹாரிஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர். அந்த வழக்கில் இவரை போலீசார் கைது செய்யவிருந்த நிலையில், தற்போது மீண்டும் போதைப்பொருளுடன் கையும் களவுமாக சிக்கியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. கைது செய்த மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை