உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புலிகள் உயிரிழப்பு: வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது

புலிகள் உயிரிழப்பு: வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது

இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில், வடமாநில தொழிலாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அமைந்து உள்ளது சசக்ஸ் தனியார் தேயிலை தோட்டம்.இங்கு கடந்த 20-ம் தேதி காலை சாலை ஓரத்தில் இரண்டு வயது ஆண் புலியும், அதனை ஒட்டிய புதர் பகுதியில் 9-வயதுடைய பெண் புலியும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது, புலிகள் இறந்து கிடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் காட்டுப்பன்றி ஒன்று உயரிழந்து கிடந்தது தெரிய வந்தது.உயிரிழந்த பன்றியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அதன் வயிற்று இரைப்பையில் மரவள்ளிக் கிழங்கு மற்றும் அரிசி ஆகியவற்றில் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது.மேலும் உயிரிழந்த 2 -புலிகளும் உயிரிழந்து கிடந்த பன்றியின் உடலை உட்கொண்டிருப்பதும் அதன் கால் தடங்களை வைத்து உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து உயிரிழந்த புலிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், அவற்றின் இரைப்பையில் உயிரிழந்த காட்டுப்பன்றியின் இறைச்சி இருந்ததும், விஷம் தாக்கி 2 புலிகளும் உயிரிழந்ததும், ஆய்வில் தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, பறக்கும் படை உதவி வனப் பாதுகாவலர் கிருபாகரன், வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் தலைமையிலான வனக்குழுவினர் எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள், தங்கள் செல்போனில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியின் உடலை புகைப்படம் எடுத்து சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது.அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், காட்டுப்பன்றிக்கு விஷம் வைத்ததை ஒப்புக்கொண்டனர்.அதனையடுத்து எஸ்டேட்டில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 35 வயது சூரியநாத் பராக், 24 வயது அமன்கொயாலா, 25 வயது சுபித்நன்வார் ஆகிய மூவரையும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ன் படி, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை