மேலும் செய்திகள்
ஜான் சல்லிவன் நினைவு பூங்கா திறப்பது எப்போது?
29-Aug-2024
கோத்தகிரி;கோத்தகிரி பேரூராட்சி, கன்னேரிமுக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜான்சல்லிவன் நினைவு பூங்கா திறக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி, கன்னேரிமுக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜான்சல்லிவன் நினைவு பூங்காவை வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதன்பின், அமைச்சர் பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தை கட்டமைத்து, மலை தோட்ட பயிர்களை அறிமுகப்படுத்தி, கன்னேரிமுக்கு பகுதியை மாவட்ட தலைமை இடமாக கொண்டு ஆட்சி பணிகளை மேற்கொண்டவர் ஜான் சல்லிவன்.அவரது நினைவாக, 2018ம் ஆண்டு, எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால், 10 ஏக்கர் பரப்பளவில் இப்பூங்கா அமைக்கப்பட்டது.அதில், எழிலுாட்டும் பணிகள் தோட்டக்கலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, 2021ம் ஆண்டு, பராமரிப்பு பணிகளுக்காக தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறைக்கு மாற்றப்பட்டு, ஜூலை, 18ல் நிலமாற்றம் செய்யப்பட்டது.இங்குள்ள காட்சி முனையில் இருந்து, பசுமையான மரங்களுக்கு நடுவில் உள்ள தேயிலை தோட்டங்களையும், பசுமை பள்ளத்தாக்குகளையும் ரசிக்கலாம். குழந்தைகள் விளையாடவும், வாகனங்கள் நிறுத்தவும், அலங்காரம், மருத்துவ தாவரங்கள் மற்றும் பூச்செடிகளை வாங்கி செல்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிர் புறத்தில் உள்ள மைதானம் வருவாய் துறையால் மீட்கப்பட்டு, தோட்டக்கலை துறை வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள, 53 ஏக்கரில், 7 ஏக்கர் சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டு, மற்றவை சுற்றுலா பூங்காவாக விரைவில் மாற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு, அவர் கூறினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா உட்பட பலர் பங்கேற்றனர்.
29-Aug-2024