மேலும் செய்திகள்
மாநில எல்லையில் மரங்கள் விழுந்து மண் சரிவு
16-Aug-2024
கூடலுார்;கூடலுார் அருகே, மாநில எல்லையில், பழுதாகி நின்ற லாரியில் இருந்து மரத் துண்டுகள் விழுந்ததால், தமிழகம்- கேரளா - கர்நாடகா இடையே மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கர்நாடகா மாநிலத்திலிருந்து, முருங்கை மரத் துண்டுகளை ஏற்றிக்கொண்டு, கேரளா சென்ற லாரி நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு நாடுகாணியை கடந்து, கேரளா நோக்கி சென்றது.தமிழகம் - கேரளா எல்லையான, கீழ்நாடுகாணி சந்திப்பு அருகே, லாரி பழுதாகி சாலையில் நின்றது. லாரியிலிருந்த மரத்துண்டுகள் சாலையில் விழுந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால், தமிழக, கேரளா, கர்நாடக இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. எந்த வசதியும் இல்லாத வனப்பகுதி என்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.தேவாலா ரோந்து வாகன எஸ்.எஸ்.ஐ., இளஞ்சேரன், தனிப்படை தலைமை காவலர் ஷியாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஓட்டுனர்கள் உதவியுடன் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையில் கிடந்த முருங்கை மரத்துண்டுகளை மாற்றி வாகன போக்குவரத்தை சீரமைத்தனர். இச்சம்பத்தால், தமிழக,-கேரளா- கர்நாடக இடையே மூன்று மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16-Aug-2024