உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

கூடலுார்; கூடலுார் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, மின் வணிகம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.கூடலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 'சில்ட்ரன் சாரிட்டபிள்' அறக்கட்டளை சார்பில் மின் வணிகம் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) சுபாஷினி தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுஜித் கண்ணா முன்னிலை வகித்தார்.வணிக துறையில் அனுபவம் பெற்ற மேகலா, 'மின் வணிகத்தில் உள்ள வாய்ப்புகள், அதில், உள்ள சவால்கள், வெற்றிகரமாக வணிகத்தை துவங்குவது, பொருட்களை விற்பனை செய்வது, இணைய பாதுகாப்பு,' குறித்து விளக்கினார். தொடந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. முகாமில், துறை தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை