உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை மாத்திரையுடன் பாலக்காட்டில் இருவர் கைது

போதை மாத்திரையுடன் பாலக்காட்டில் இருவர் கைது

பாலக்காடு, ; பாலக்காட்டில், எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரையுடன் இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, பாலக்காடு டவுன் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விபின் வேணுகோபால் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு பாலக்காடு சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரோந்து சென்றனர்.அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரிடம் நடத்திய சோதனையில், 69.85 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து நடத்திய விசாரணையில், இவர் திருச்சூர் மாவட்டம் பெரிங்கோட்டுகரை பகுதியைச் சேர்ந்த லெனீஷ், 28, என்பது தெரியவந்தது.அதேபோல், பாலக்காடு டவுன் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆதம்கான் தலைமையிலான போலீசார், நேற்று காலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரிடம் நடத்திய சோதனையில், 15 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை கைப்பற்றப்பட்டது.இதையடுத்து நடத்திய விசாரணையில், இவர் திருச்சூர் மாவட்டம் முகுந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அக் ஷய், 24, என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி