உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி; முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு வாய்ப்பு

பழங்குடியினருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி; முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு வாய்ப்பு

ஊட்டி : 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வுக்காக அளிக்கப்படும் பயிற்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் ( தாட்கோ) முன்னெடுப்பாக, டாக்டர் அம்பேத்கர் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஒரு வருட காலம் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை, முதன்மை நிலை பயிற்சி வழங்க உள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணவர்கள், திரையிடல் சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக தகுதியுள்ள, 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட கலெக்டரின் அறிக்கையில், '21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக ஒரு வருடம் விடுதியில் தங்கி படிக்கவும், பயிற்சிக்கான செலவின தொகை தாட்கோ மூலம் வழங்கப்படும். எனவே, www.tahdco.comஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ