வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த 6 கோடியெல்லாம் தேர்தல் நிதியில் சேர்ந்துடுங்கப்பா என்பது அப்பா கட்டளையாக இருக்ககூடும்.
கூடலுார்; கூடலுார் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை அறிந்து தடுக்க, 6 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில், 80 முதல் 120 யானைகள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடை காலங்களில், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மனிதர்களை தாக்கி கொல்வது தொடர்கிறது. இதை தொடர்ந்து, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, வனப்பகுதி எல்லைகள், குடியிருப்புகளை சுற்றி அகழி அமைத்துள்ளனர். எனினும், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் முன்பாகவே, அவற்றை கண்டறிந்து, விரட்டும் வகையில், கூடலுார் வனக்கோட்டத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செயற்கை நுண்ணறிவு கேமரா மற்றும் கருவிகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''கூடலுாரில் யானை-மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை முன்பே அறிந்து தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்காக, ஊசிமலை பகுதியில் 'ஒயர்லெஸ் ரிப்பீட்டர்ஸ் சென்டர், கட்டுப்பாட்டு அறை, 35 முன்னெச்சரிக்கை கோபுரங்கள்,' அமைத்து செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்துவதற்கான பணி நடந்து வருகிறது. பணி முடிந்து, வரும் 25ம் தேதி செயல்பாட்டுக்கு வரும். இதனால், யானை- மனித மோதலை பெரும்பாலும் தடுக்க முடியும்,'' என்றார்.
இந்த 6 கோடியெல்லாம் தேர்தல் நிதியில் சேர்ந்துடுங்கப்பா என்பது அப்பா கட்டளையாக இருக்ககூடும்.