சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ஊட்டி:நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே கிராமத்தை சேர்ந்த, 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ராஜா, 25, என்பவர் மிரட்டி பல முறை பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ராஜாவின் தொந்தரவு தாங்க முடியாத சிறுமி, 'சைல்டு லைன்' எனும் குழந்தைகள் நல அமைப்பினர் உதவியுடன், குன்னுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், 2021ம் ஆண்டு ஜன., 30ம் தேதி ராஜனை கைது செய்தனர். இவ்வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை; 15,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு, 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.