வாசகர்கள் கருத்துகள் ( 1 )
JeevaKiran
அக் 11, 2024 16:51
கரடி வருது என்றால், அதெல்லாம் வனவிலங்குகளின் இருப்பிடம். அங்கு மனிதனுக்கு என்ன வேலை. முதலில் மனிதனை அங்கிருந்து அப்புறப்படுத்துங்கள்.
குன்னுார் : குன்னுார் காட்டேரி அருகே இரவில் வீடுகளின் கதவுகளை உடைக்கும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குன்னுார் காட்டேரி அருகே போயர் காலனி குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த, 3 நாட்களாக இரவு நேரத்தில் வரும் கரடிகள் சில வீடுகளின் கதவுகளை உடைத்துள்ளது. நேற்று சமையலறை கதவுகளை உடைத்து உள்ளே இருந்த எண்ணெய் மற்றும் சமையல் பொருட்களை உட்கொண்டு சென்றுள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரடி வருது என்றால், அதெல்லாம் வனவிலங்குகளின் இருப்பிடம். அங்கு மனிதனுக்கு என்ன வேலை. முதலில் மனிதனை அங்கிருந்து அப்புறப்படுத்துங்கள்.