கோத்தகிரி நேரு பூங்காவில் மாலை நேரத்தில் சிறுவர்கள் கூட்டம்
கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவினுள், அமைந்துள்ள சிறுவர் பூங்காவில், சிறுவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.கோத்தகிரி நேரு பூங்காவில், கோடை விழாவில் முதல் நிகழ்வாக, கடந்த, 3, 4 ம் தேதிகளில், 13வது காய்கறி கண்காட்சி நடந்து முடிந்தது. இரண்டு நாட்கள் நடந்த கண்காட்சியில், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர் மற்றும் சிறுமியரின் கூட்டம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெற்றோருடன், காலையிலேயே வரும் சிறுவர்கள், பூங்காவில் பசுமையான புல்தரையில் ஓடி மகிழ்ந்து வருகின்றனர். 'எதிர்வரும் நாட்களில், சிறுவர்களை மகிழ்விக்கும் பொருட்டு, கூடுதலாக விளையாட்டு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.