உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் விழுந்தவர் மீது லாரி ஏறியதில் உயிரிழந்தார்

சாலையில் விழுந்தவர் மீது லாரி ஏறியதில் உயிரிழந்தார்

பாலக்காடு, ; பாலக்காடு அருகே, பைக் சரிந்து சாலையில் விழுந்தவர் மீது, லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்லேபுள்ளி பகுதியை சேர்ந்த முனிசாமியின் மகன் சக்திவேல், 18. இவர், பாலக்காடு நகரிலுள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்காடு - -பட்டாம்பி சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேபரம்பு பகுதியில் பைக் திடீரென கட்டுப்பாட்டு இழந்து சாலையில் சரிந்தது. அப்போது, சாலையில் விழுந்த சக்திவேல் மீது, பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த, பாலக்காடு டவுன் மேற்கு போலீசார், சக்திவேலின் உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை