உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கலப்படத்துக்கு வரும் கர்நாடக கேரட் நீலகிரியில் தனி குழு அமைத்து ஆய்வு

கலப்படத்துக்கு வரும் கர்நாடக கேரட் நீலகிரியில் தனி குழு அமைத்து ஆய்வு

குன்னுார்; கர்நாடக மாநிலத்தின் தரமில்லாத கேரட் ஊட்டி கேரட் மூட்டைகளில், கலந்து விற்பனை செய்வதை தடுக்க தனி குழு அமைத்து ஆய்வு பணி துவங்கியுள்ளது.ஊட்டி, குன்னுார் உட்பட பல்வேறு பகுதிகளில், விளைவிக்கப்படும், ஊட்டி கேரட், மேட்டுப்பாளையம், திருச்சி, சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகளில் கொண்டு சென்று விற்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தரம் இல்லாத கேரட் மூட்டைகள் நீலகிரிக்கு கொண்டு வந்து, ஊட்டி கேரட் மூட்டைகளில் கலந்து விற்பனை செய்வதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 11ல், கர்நாடக மாநிலம், மாளூரில் இருந்து தரம், சுவை குறைந்த கேரட்களை வியாபாரிகள் சிலர் கொண்டு வந்து, கேத்தி பாலாடாவில் உள்ள கேரட் சுத்திகரிப்பு மையங்களில் கழுவிய போது, 5 டன் தரம் குறைந்த கேரட் மூட்டைகளை விவசாயிகள் பிடித்து, திருப்பி அனுப்பினர். மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், தோட்டக்கலைத் துறையினர் ஆய்வுகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமையில், ஊட்டி டவுன் டி.எஸ்.பி., வேளாண் சந்தைப்படுத்துதல் துணை இயக்குனர், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர், ஊட்டி, குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கேரட் விளைவிக்கும் பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஆய்வறிக்கையை, 7 நாட்களில் கலெக்டரிடம் சமர்பிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ