உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அபாய மரங்களால் ஆபத்து அகற்ற நடவடிக்கை அவசியம்

அபாய மரங்களால் ஆபத்து அகற்ற நடவடிக்கை அவசியம்

கோத்தகிரி; கோத்தகிரி நுாலகம் அருகே, வானுயர்ந்த அபாயகரமாக கற்பூர மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் ஆபத்து அதிகரித்துள்ளது.கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, ராம்சந்த் பகுதியில், கிளை நுாலகம் அமைந்துள்ளது. நுாலகத்தை நாள்தோறும், 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நுாலகத்தின் பின்புறத்தில், அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. காளவாய் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு, அந்த வழியாகவே சென்று வர வேண்டும். இதே பகுதியில், அரசு பயணியர் விடுதியும் அமைந்துள்ளது.இதனால், நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கற்பூர மரங்கள், மழையுடன் பலத்துக்காற்று வீசும் போது, விழும் நிலையில் உள்ளன. இதே பகுதியில் சிவில் சப்ளை, கிடங்கு வளாகத்தில், கடந்த ஆண்டு ஐந்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து, மேற்கூரை சேதமடைந்த சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.எனவே, மழை தீவிரம் அடைவதற்கு முன்பு, நுாலகத்தின் பின்புறத்தில் உள்ள அபாயம் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி