அம்பலீயூர் கொப்பை கல்லறை திருவிழா; இருளர் பழங்குடிகள் பிரார்த்தனை
ஊட்டி; மசினகுடி அருகே, ஆனைகட்டி பகுதியில் இருளர் மக்கள் பங்கேற்ற 'அம்பலீயூர்' கொப்பை கோவில் கல்லறை திருவிழா கோலாகலமாக நடந்தது. மசினகுடி அருகே ஆனைகட்டி பகுதியில் இருளர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள வனத்தில் பிரசித்தி பெற்ற 'அம்பலீயூர்' கொப்பை கோவில் உள்ளது ஆண்டுதோறும் இருளர் பழங்குடியினர் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். நடப்பாண்டின் திருவிழா நேற்று நடந்தது. அதில்,ஆனைகட்டி,சிறியூர், சொக்கனல்லி,வாழை தோட்டம்,மாவனல்லா, செம்மநத்தம்,பொக்காபுரம்,மாயார், மசினகுடி, கல்லாம் பாளையம், புதுக்காடு, அல்லிமாயார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இருளர் பழங்குடியினர் பங்கேற்றனர். அவர்கள் கோவிலில் பூஜை நடத்திய பின்னர், தங்களது முன்னோர்களுக்கு படையல் வைத்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.