புலிகள் கணக்கெடுப்பு பணி :140 இடங்களில் தானியங்கி கேமரா
பந்தலுார்: கூடலுார், ஓவேலி, ஜுன்பூல், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு ஆகிய வனச்சரகங்களில், வன அலுவலர் தேவராஜ் மேற்பார்வையில், 140 தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதில், தேவாலா வனச்சரகத்தில், 20 இடங்களில், தலா இரண்டு கேமராக்கள் வீதம் பொருத்தப்பட்டு, வனச்சரகர் சஞ்சீவி, வனவர்கள் சுரேஷ்குமார், சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், இந்த பணி துவக்கப்பட்டு உள்ளது. 5- நாட்களுக்கு ஒரு முறை கேமராவில் உள்ள, மெமரி கார்டு எடுக்கப்பட்டு வன அலுவலர் அலுவலகத்தில், ஆய்வு செய்யப்பட உள்ளது. வனத்துறையினர் கூறுகையில்,' இந்த பணியில், புலி மட்டுமின்றி அனைத்து விதமான வனவிலங்குகளும், பதிவாகும் நிலையில் முக்கியமாக புலியும், பிற விலங்கினங்களும் இந்த கணக்கெடுப்பில் எடுத்து கொள்ளப்படும்,' என்றனர்.