உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

கோத்தகிரி ; கோத்தகிரி கடைவீதி அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது.கோத்தகிரி கடைவீதியில் உள்ள அழகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நாள்தோறும் அம்மனுக்கு, ஆராதனை, அபிஷேகம், மலர் அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை, பூ குண்டம் திருவிழா நடந்தது.அதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில் அம்மனின் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, திருக்கோவில் அறங்காவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை