உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ராணுவ மையம் அருகே சண்டையிட்ட காட்டெருமைகள்

ராணுவ மையம் அருகே சண்டையிட்ட காட்டெருமைகள்

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவ மையம் அருகே இரு காட்டெருமைகள் மோதி கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.குன்னுார் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் காட்டெருமைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று இங்கு இரு காட்டெருமைகள் மோதி சண்டையிட்டன. இதனை மக்கள் விரட்டினர். எனினும் சிறிது நேரம் சண்டையிட்ட நிலையில் ஒரு காட்டெருமை திடீரென ஓட்டம் பிடித்தது. அப்போது, சாலையில் 'மொபைலில் வீடியோ' எடுக்க வந்த நபர் ஓட்டம் பிடித்து தப்பித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !