உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் சோதனை

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் சோதனை

குன்னுார் : குன்னுார் ஸ்டேன்ஸ் மேல்நிலை பள்ளிக்கு, இ--மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.குன்னுார் பெட்போர்டு அருகே உள்ள, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். காலாண்டு தேர்வு முடிந்த நிலையில் கடந்த, 5ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பள்ளி அலுவலக இ-மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் சார்பில், அப்பர் குன்னுார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஊட்டி வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். அப்பர் குன்னுார் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், விசாரணை நடத்தப்பட்டது. எனினும் எங்கும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. போலீசார் கூறுகையில்,'பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ