உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அறுவடை செய்தும் பயனில்லை

 முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அறுவடை செய்தும் பயனில்லை

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில்,நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில் முட்டைகோஸ் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பு போகத்தில், தாழ்வான நிலங்களில் முட்டைகோஸ் கணிசமான பரப்பளவில் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். கடந்த, 10 நாட்களுக்கு முன் ஒரு கிலோ முட்டை கோஸ், 15 முதல், 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் இழப்பை சந்தித்தனர். தற்போதும், மேட்டுப்பாளையம் மண்டிகளில் அதே விலை நீடிக்கிறது. உள்ளூர் மார்க்கெட்களில், 20 முதல், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அறுவடை செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருவதால், தயாரான முட்டை கோஸ் தோட்டத்திலேயே அழுகிவிடும் என்பதால், அறுவடை செய்து, மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனை செய்ய லாரிகளில் கொண்டு செல்கின்றனர். எனினும் பயனில்லாத நிலை தொடர்கிறது. விவசாயிகள் கூறுகையில்,' கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், அறுவடை செய்தும் பயனில்லாத சூழல் உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை