உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆட்டோ டிரைவராக மாறிய வேட்பாளர்

 ஆட்டோ டிரைவராக மாறிய வேட்பாளர்

கூடலுார்: கூடலுாரில் அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன் ஆட்டோ டிரைவராக மாறி ஓட்டு சேகரித்தார். கூடலுாரில் அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஓட்டுனரை போல, சீருடை அணிந்து ஆட்டோவை ஓட்டி சென்று டிரைவர்களிடம் ஓட்டு சேகரித்தார். வாக்காளரிடம் சென்று, ஓட்டு போடவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பிரசாரம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !