உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கஞ்சா பறிமுதல் மேற்கு வங்கத்தினர் 4 பேர் கைது

கஞ்சா பறிமுதல் மேற்கு வங்கத்தினர் 4 பேர் கைது

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிரிஷ் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினரும், இன்ஸ்பெக்டர் நவுபல் தலைமையிலான கலால் துறையினரும் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் இருந்த நான்கு பேரை பிடித்து சோதனையிட்டபோது, 35 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள, 71 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர்கள் மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த மைனுல் இஸ்லாம், 21, மன்னன் மொல்லா, 38, தோஜம்மல், 36 மற்றும் நூர் இஸ்லாம்,20, என்பதும், கேரள மாநிலத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்