சென்னை மலர் கண்காட்சி: ஊட்டியிலிருந்து 6 லட்சம் பூக்கள்
ஊட்டி; சென்னையில் நடக்க உள்ள மலர் கண்காட்சிக்கு, ஊட்டி பூங்காவில் இருந்து, 6 லட்சம் மலர்கள் எடுத்து செல்லப்படுகிறது.சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டக்கலை துறை பூங்காவில் இருந்து மலர் செடிகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அலங்கரித்து வைக்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான மலர் கண்காட்சி விரைவில் நடக்க உள்ளது. இதற்காக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த சில மாதங்களாக மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை உதவி இயக்குனர் பிபீதா கூறுகையில்,''சென்னை செம்மொழி பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ெய்சி,மேரி,கோல்டு, சால்வியா' உள்ளிட்ட, 32 வகைகளில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. தயார் செய்யப்பட்ட மலர்கள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது,'' என்றார்.