உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உண்ணி ஊட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்

உண்ணி ஊட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்

பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில், கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உண்ணி ஊட்டு நிகழ்ச்சி நடந்தது. பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில் நேற்று காலை, 7:00 -மணிக்கு கணபதி ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாமம் பூஜைகளுடன் துவங்கிய நிகழ்ச்சியில் புத்தக பூஜை நடந்தது. ஆச்சாரியர் ஸ்ரீ வியாசன் தலைமையில், மேல் சாந்தி வைசாக் சர்மா பூஜைகளை செய்தார்.தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்தின் முன்பு, இனிப்பு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள், விவசாய விலை பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பின் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது.குழந்தைகளுக்கு தலைவாழை இலை போட்டு, முதலில் வெண்ணை வழங்கப்பட்டு, தொடர்ந்து அனைத்து வகை உணவு பொருட்களும் வைத்து ஊட்டப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வினோத், தலைவர் புஷ்பாகரன் ஆகியோர் கூறுகையில், ''கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், 'உண்ணி ஊட்டு' என்ற பெயரில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி மிக பிரபலமாகும். அதேபோல், இங்கு உள்ள குழந்தைகளுக்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சோறு ஊட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்று, கிருஷ்ணரை தரிசனம் செய்து பிரசாதம் வாங்கி சென்றது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றனர். ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் தலைமையில், பொது செயலாளர் உன்னிகிருஷ்ணன், பொருளாளர் சந்தியா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ