உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் மார்க்கெட் கடை இடிப்பு விவகாரம் கமிட்டி அமைக்க நகர மன்ற கூட்டத்தில் முடிவு

குன்னுார் மார்க்கெட் கடை இடிப்பு விவகாரம் கமிட்டி அமைக்க நகர மன்ற கூட்டத்தில் முடிவு

குன்னுார்,; குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து கட்டுவதற்கு முன், வியாபாரிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.குன்னுார் நகர மன்ற கூட்டம் தலைவர் சுசீலா தலைமையில் துவங்கியதும், பெண் கவுன்சிலர்கள் முதலில் பேச அழைப்பு விடுத்தார்.கவுன்சிலர் செல்வி: 2023ல் மழை பாதிப்பின் போது, 'சப்ஜெக்ட்' கொடுத்தும் பணிகள் மேற்கொள்ளவில்லை. தடுப்பு சுவர், படிக்கட்டு நடைபாதை, உள்ளிட்ட பணிகள் அடுத்த தேர்தல் வரும் நிலையில் மக்கள் கேள்வி கேட்கின்றனர், 3 லட்சத்திற்குள் செய்யும் பணிகளும் நடக்கவில்லை.ராமசாமி: கடந்த தீர்மானத்தில், 18 லட்சம் ரூபாய் திட்டம் உட்பட பணிகளில் தரமில்லாமல் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் 'பிளாக் லிஸ்ட்டில்' கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றியும், அவர்களுக்கு தொகை வழங்கப்பட்டு பணிகள் வழங்கப்படுகிறது,'உழவர் சந்தை பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்தால் வியாபாரிகள் யாரும் செல்ல மாட்டார்கள்.,' என, கடந்த கூட்டத்தில் வலியுறுத்தியும், அதே இடத்தில் செல்ல வற்புறுத்தப்படுகிறது.சில கவுன்சிலர்கள் கூறுகையில்,'குண்டம் இடத்தில் அருகே பூட்டப்பட்டுள்ள காலி இடங்கள், டி.டி.கே., சாலையோரம்,சாமண்ணா பார்க், ஆற்று பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் கடை அமைத்து கொடுக்கப்பட உள்ளது. அங்கு முழு வசதிகள் செய்துகொடுக்க வேண்டும், இதற்காக கமிட்டி அமைத்து மாவட்ட கலெக்டரை சந்திக்க வேண்டும்,' என்றனர். கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது.கமிஷனர் இளம்பரிதி: வியாபாரிகள் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கேட்கின்றனரே தவிர, மாற்று கடை தொடர்பாக எதுவும்தெரிவிப்பதில்லை. அரசு கொண்டு வந்த திட்டத்தை தான் செயல்படுத்துகிறோம். முதற்கட்ட, 150 கடை பணியில், காய்கறி கடைகள், நகை கடைகள்உள்ளிட்ட சில பிரிவு கடைகள், ஒரே பகுதிகளில் இருப்பது போன்று மாற்றப்படும்.வி.பி., தெரு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும். ஒவ்வொரு கடைகளின் இட அளவீடு பிரச்னைக்கு தீர்வு காண 'முன் டெண்டர்' விடப்பட்டு அதற்கான அளவீடுக்கு ஏற்ப கடைகள் அமைக்கலாம்.பாக்கியவதி: அம்பேத்கர் நகரில் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. மழையில் வீடுகள் இடிந்தது. பல வீடுகள் அந்தரத்தில் உள்ளது. தடுப்பு சுவர் உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்.தொடர்ந்து நடைபாதை,தெரு விளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க கவுன்சிலர்கள் சாந்தா, காவேரி, செல்வி, லாவண்யா, மணி உட்பட பலர் வலியுறுத்தினர்.கமிஷனர் இளம்பரிதி: 10 கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு நிதி கோரப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை