உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரு மாநில சாலையில் இடிந்த தடுப்பு சுவர்; அதிகாரிகள் விசாரணை நடத்த வலியுறுத்தல்

இரு மாநில சாலையில் இடிந்த தடுப்பு சுவர்; அதிகாரிகள் விசாரணை நடத்த வலியுறுத்தல்

பந்தலுார்: 'பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலுாரில் இருந்து தேவர்சோலை வழியாக கேரள மாநிலம் வயநாடு; தமிழக எல்லை பகுதியான பாட்டவயல், அய்யன்கொல்லி, பந்தலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் நெடுஞ்சாலை நெலாக்கோட்டை பகுதியில் அமைந்து உள்ளது.இந்த சாலையின் கீழ் உள்ள இடங்கள் அரசு நிலங்களாக உள்ளன. மிகவும் தாழ்வான இந்த பகுதியில், தனிநபர் ஒருவர் வீடு கட்டுவதற்காக மண்ணை அகற்றி உள்ளார். மழையின் போது, மண் அகற்றப்பட்ட பகுதியில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டு, தமிழக- கேரளா சாலை துண்டிக்கப்படும் அபாய நிலையில் உள்ளது. மேலும், குடிநீர் குழாய் உடைப்பு, மின்கம்பம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை