ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துள்ள வண்ண மலர்கள்
ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக பல்வேறு வண்ணங்களில் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுக்களித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் துவங்கி, 3ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில், காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. கோடை விழாவுக்காக, தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உட்பட முக்கிய சுற்றுலா மையங்கள் சிறப்பாக பொலிவுப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக, ஊட்டி ரோஜா பூங்காவில், 40,000 வகைகளில், பல்வேறு வண்ணங்களில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா மலர்கள் தற்போது, பூத்து குலுங்குவது, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.தாவரவியல் பூங்காவுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு சென்று, பூத்துள்ள ரோஜா மலர்களை ஆர்வத்துடன், கண்டுக்களித்து செல்கின்றனர். பெரும்பாலான பயணிகள், புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.