உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இழப்பீடு தொகை கரையான் பிடித்து வீணாகிறது ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருத்து

 இழப்பீடு தொகை கரையான் பிடித்து வீணாகிறது ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருத்து

ஊட்டி: ஊட்டியில் மா.கம்யூ.,போராட்ட குழு சார்பில், மனித - விலங்கு மோதல் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன், பெரும்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகித்தார். மா. கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மலை மாவட்டத்திற்கு உலக முழுவதில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா வாயிலாக, அரசு கணிசமான வருவாய் ஈட்டுகிறது. நீலகிரியில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. 'எந்த வகையான நிலத்தில் மக்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்,' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், மாநில அரசு செவி சாய்க்காமல் இருப் பது, கண்டனத்துக்கு உரியது. மாவட்டத்தில் மனித-விலங்கு மோதல் அதிகமாக உள்ளது. உயிர் இழப்பவர்கள், ஊனம் அடைபவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. இங்கு வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக்கூடிய நிதி போதுமானதாக இல்லை. அதிகாரிகள் சான்றுகள் கேட்பது, விசாரணை என்ற பெயரில் காலம் கடத்துவது நியாயமில்லை. மக்களுக்கு இழப்பீடு வழங்கு வதற்கான தொகை வனத்துறையிடம் கரையான் பிடித்து வீணாகிறது. உடனுக்குடன் இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல, வன விலங்குகளால், விவசாய பயிர்கள் சேதம் அடைவது அதிகமாக உள்ளது. பயிர் சேதத்திற்கு ஏற்ப, முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். கூடலுார் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜென்மம் நில பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ