குன்னுார் நாய்கள் கண்காட்சி ; பெஸ்ட் இன் ஷோ கிரேட்டேன்
குன்னுார்; குன்னுாரில் நடந்த நாய்கள் கண்காட்சியில், 'பெஸ்ட் இன் ஷோ' பரிசை கிரேட்டேன் வகை நாய் வென்றது. குனனுார் பிராவிடன்ஸ் கல்லுாரி மைதானத்தில், நீலகிரிஸ் கென்னல் சங்கம் சார்பில், இரண்டு நாட்கள் நாய்கள் கண்காட்சி நடந்தது. அதில், 45 வகையை சேர்ந்த, 250 நாய்கள் பங்கேற்றன. கட்டளைக்கு கீழ்ப்படிதல், மோப்ப திறன், ஓடும் திறன், வயது, எடை, உயரம் பரிசோதித்து, போட்டிகள் நடத்தப்பட்டது.அதில், 'பெஸ்ட் இன் ஷோ' விருதுக்கு, அருண் பிஷிர்கேவின் என்பவரின் கிரேட் டேன் வகை நாய் தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவது இடத்தை ஹீனா என்பவரின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்; மூன்றாவது இடத்தை ஸ்ரீஜித் என்பவரின் பீகில் நாய் பிடித்தது. கண்காட்சியின் சிறந்த இனமாக, வெற்றி செல்வன் என்பவரின் பாக்ஸ் டெரியர் நாய் தேர்வு செய்யப்பட்டது. ஷூபாகி முத்துார் என்பவரின் லேபரடார், ரிட்ரீவர் இரண்டாம் இடம் பெற்றன. சிறந்த 'பப்பி டாக்' ஆக பாலமுருகன் பவித்ரா என்பவர்களின் பீகில் தேர்வு செய்யப்பட்டது. இவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, நீலகிரிஸ் கென்னல் சங்க தலைவர் லஜபதி, துணை தலைவர் ஜோஷி, கவுரவ செயலாளர் விவேக் லஜபதி உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.