உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சியில் ரூ.1 கோடி ஊழல் புகார் கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு

நகராட்சியில் ரூ.1 கோடி ஊழல் புகார் கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு

கோத்தகிரி, ;'கோத்தகிரி நகராட்சியில், ஒரு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது,' என, புகார் தெரிவித்து, கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,நகர மன்ற முதல் கூட்டம்நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். கமிஷனர் மோகன் குமார் மற்று துணை தலைவர் உமாநாத் உட்பட, 20 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கிய நேரம் முதல், 'பேரூராட்சியாக இருந்த போது நடந்த ஊழலில், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,' என, கவுன்சிலர்கள் குரல் எழுப்பினர்.அதில்,'பேரூராட்சியாக இருந்த நேரத்தில், ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கியது; முதல்வர் வருகைக்காக பிளீச்சிங் பவுடர் வாங்கியது; புதிய மின் மோட்டார்கள் வாங்கியது; புதர் செடிகள் வெட்டியது,' உள்ளிட்ட பல்வேறு வகையில், ஒரு கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளது,' என குற்றம் சாட்டி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில், 20 பேர் பங்கேற்ற நிலையில், 13 கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், நகர மன்ற கதவை மூடிய பின், குற்றச்சாட்டுகள் தொடர்பான ரகசிய கூட்டம் நடந்ததால், வெளியேறிய கவுன்சிலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

குளறுபடிகள் நடந்ததால் விவாதம்

நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி கூறுகையில், ''இரு முறை முதல்வரின் வருகை, ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட தேவைகளுக்காக, என்னிடம் முன் அனுமதி கையெழுத்து பெறப்பட்டது. நிர்வாகத்தில், குளறுபடிகள் நடந்ததாக தெரியவந்த நிலையில், அது குறித்து, மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தவறுகள் நடந்திருப்பின், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை