உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோர்ட் ஊழியர் தற்கொலை; போலீசார் விசாரணை

கோர்ட் ஊழியர் தற்கொலை; போலீசார் விசாரணை

கோத்தகிரி : கோத்தகிரியில் கோர்ட் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோத்தகிரி கடை வீதி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் 40. கோத்தகிரி கோர்ட்டில், காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர், பஸ் நிலையத்தில் ஒரு தனியாருக்கு சொந்தமான சிறிய அறையில், இஸ்திரி கடை வைத்து நடத்தி வந்தார்.நேற்று மதியம் பணிக்கு செல்லாத இவர், கடையில் பணியில் ஈடுபட்டு உள்ளார். இரவு, வீட்டுக்கு செல்லவில்லை. நேற்று காலை, கடையை திறந்த போது, செந்தில்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.தகவல் அறிந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை