உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்துள்ள சேமுண்டி சாலை: சிரமப்படும் மக்கள்

சேதமடைந்துள்ள சேமுண்டி சாலை: சிரமப்படும் மக்கள்

கூடலுார்; 'கூடலுார் புத்துார்வயல் அருகே, சேதமடைந்துள்ள சேமுண்டி சாலையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் இருந்து மண்வயல் பகுதிக்கு, அத்திப்பாளி வழியாகவும், புத்துார் வயல் வழியாகவும் சாலைகள் செல்கிறது. அதில், அத்திப்பாளி வழியாக அரசு பஸ், தனியார் ஜீப் இயக்கி வருகின்றனர். புத்துார்வயல் சாலை, அதனை ஒட்டி வசிப்பவர்கள் போக்குவரத்துக்கு ஆட்டோ மற்றும் சொந்த வாகனங்களை நம்பி உள்ளனர்.புத்துார் பாலம் அருகே, சேமுண்டி சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, அத்திப்பாளி வழியாக செல்லும் மண்வயல் சாலையில் இணைக்கிறது. 2 கி.மீ., துாரம் உள்ள இச்சாலையை சேமுண்டி மற்றும் அதனை ஒட்டிய, கிராம மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலை சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள், கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு சேதமடைந்துள்ள சேமுண்டி சாலையை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ