மேலும் செய்திகள்
பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு
28-Jun-2025
கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு -பெட்டட்டி இடையே, ஆருவ ஒசஹட்டி பஸ் நிறுத்தத்தில், நுாற்றுக்கணக்கான பயணிகள் மழை மற்றும் வெயில் நாட்களில் ஒதுங்க ஏதுவாக, பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாமல், சுவர்கள் சேதமடைந்தன. மேற்கூரையில் காட்டு செடிகள் ஆக்கிரமித்துள்ளன. மேலும், இருக்கைகள் பெயர்ந்தும், வர்ணம் பூசாமலும் விடப்பட்டு, லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், மழை மற்றும் வெயில் நாட்களில், பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குன்னுார், கோத்தகிரி செல்லும் மக்கள் அதிகளவில் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருவதால், சம்பந்தப்பட்ட நிர்வாகம், சேதம் அடைந்த நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.
28-Jun-2025