உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிணற்றில் விழுந்த பசு மீட்ட பேரிடர் மீட்பு குழு

கிணற்றில் விழுந்த பசு மீட்ட பேரிடர் மீட்பு குழு

பந்தலுார்; பந்தலுார் அருகே ஏலமன்னா கிராமத்தை சேர்ந்தவர் உதயசூரியன். இவர் மாடுகளை வளர்த்து வருகிறார்.அதில், மேய்ச்சலுக்கு சென்ற பசு ஒன்று காணாமல் போன நிலையில், நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து எழ முடியாமல் இருந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பேரிடர் மீட்புப் பணிக்கு வந்த தீயணைப்பு துறையினர் வந்து, கிணற்றில் விழுந்திருந்த பசுவை உயிருடன் மீட்டனர். மேலும் கிணற்றின் மேல் பகுதியில் மூடி அமைக்க வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை