உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடும் குளிரான காலநிலை; கோடநாடு காட்சிமுனை வெறிச்

கடும் குளிரான காலநிலை; கோடநாடு காட்சிமுனை வெறிச்

கோத்தகிரி; கோத்திகிரி பகுதியில், குளிரான காலநிலை நிலவுவதால், கோடநாடு காட்சிமுனை, பார்வையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில், கோடநாடு காட்சி முனை முக்கியத்துவம் பெறுகிறது. கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காட்சி முனை அழகை காண்பதற்கு, கோடை சீசன் உட்பட சாதாரண நாட்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். தவிர உள்ளூர் மக்களின் வருகையும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், மாவட்டத்தில், குறிப்பாக, தாழ்வான பகுதியில் அமைந்துள்ள கோடநாடு பகுதியில் அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது. மேகமூட்டமும் அதிகமாக உள்ளதால், தெங்குமரஹாடா கிராமம், வளைந்து நெளிந்து செல்லும் மாயாற்றின் அழகை காண முடியாத நிலை உள்ளது. இதனால், காட்சி முனையில், பார்வையாளர்களின் வருகை வெகுவாக குறைந்து, வெறிச்சோடி காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை