உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தற்காலிக மார்க்கெட்டில் புகுந்த வளர்ப்பு எருமைகள்

தற்காலிக மார்க்கெட்டில் புகுந்த வளர்ப்பு எருமைகள்

ஊட்டி; ஊட்டியில் தற்காலிக மார்க்கெட் பகுதியில் புகுந்த வளர்ப்பு எருமைகள் காய்கறிகளை சேதப்படுத்தின. ஊட்டி மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதி, 36 கோடி ரூபாயில் புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இங்கு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்காக ஏ.டி.சி., பகுதியில், 2000 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டி பகுதியில் சுற்றி திரிந்த வளர்ப்பு எருமைகள், கூட்டமாக இரவு நேரத்தில் தற்காலிக மார்க்கெட் பகுதியில் புகுந்து அங்கு வைக்கப்பட்ட காய்கறி பொருட்களை துவம்சம் செய்து சேதப்படுத்தி உட்கொண்டு சென்றுள்ளன. வியாபாரிகள் கூறுகையில், 'நகராட்சி நிர்வாகம் தற்காலிக மார்க்கெட் பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை