உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நேரு பூங்காவில் மலர் நாற்று பாத்திகள் தயார் படுத்தும் பணி

நேரு பூங்காவில் மலர் நாற்று பாத்திகள் தயார் படுத்தும் பணி

கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்ய, பாத்திகள் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.கோத்தகிரி நகரின் மையப்பகுதியில், நேரு பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கு நிறைந்த பகுதியாக உள்ளது. தவிர, நீலகிரியில் நடைபெறும் கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பது வழக்கம்.கோத்தகிரி பேரூராட்சி நிர்வகித்து வரும் பூங்கா பசுமையாக காணப்படுகிறது. மேலும், நடைபாதை, இருக்கைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு பொலிவுடன் காணப்படுகிறது.இந்நிலையில், வரும் மே மாதம் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி அடுத்த வாரம் துவங்க உள்ளது. பல்வேறு வண்ணங்களில், 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட, மலர் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன.மலர் நாற்றுகளை நடவு செய்ய ஏதுவாக, பட்டுப்போன மலர் செடிகள் அகற்றப்பட்டு, பாத்திகளை பண்படுத்தி தயார் படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ