உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வன செயல் திட்டம்: மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை

வன செயல் திட்டம்: மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை

கூடலுார்; கூடலுார் வனக்கோட்டத்தில் அடுத்த, 10 ஆண்டுகளுக்கான, 'வன செயல் திட்டம்' குறித்து, தமிழக வனத்துறை அதிகாரிகளுடன், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கூடலுார் வனக்கோட்டத்தில் அடுத்த, 10 ஆண்டுக்கான வன செயல் திட்டம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் முதுமலையில் நேற்று முன்தினம், நடந்தது. சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக சென்னை பிராந்திய இயக்குனர் ஜார்ஜ் ஜென்னர் தலைமையில் கூட்டம் நடந்தது. வனத்துறை கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சசிகுமார், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் யுவராஜ் ஆகியோரும், தமிழக வனத்துறை சார்பில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர், வன பாதுகாவலர் வன செயல் திட்டம் வெங்கடேஷ், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் பங்கேற்றனர் கூட்டத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள வன செயல் திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். பல்வேறு ஆலோசனைகள் நடந்தது. தொடர்ந்து, நடுவட்டம் டான்டீ பகுதியில் உள்ள, 160 ஆண்டுகள் பழமையான, ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட சிறை சாலையை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ