உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனவிலங்கு வேட்டைக்கு சுருக்கு கம்பி மோப்ப நாயுடன் வனத்துறை சோதனை

வனவிலங்கு வேட்டைக்கு சுருக்கு கம்பி மோப்ப நாயுடன் வனத்துறை சோதனை

கூடலுார், ; கூடலுார் அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்த பகுதியில், வனத்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.கூடலுார் செலுக்காடி அருகே, நவ., 27ல் சுருக்கு கம்பியில் சிக்கி, 4 வயது ஆண் புலி, உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் மூன்று பேரை கைது செய்தனர். இந்நிலையில், அப்பகுதிகளில், வனவிலங்கு வேட்டைக்கு சுருக்கு கம்பி வைக்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்ய, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவிட்டார். தொடர்ந்து, உதவி வன பாதுகாவலர்கள் கருப்பையா, அருண்மொழிவர்மன் (பயிற்சி), ஓவேலி வனச்சரகர் சுரேஷ்குமார் மற்றும், 30 வன ஊழியர்கள், செலுக்காடி, வேடன்வயல், தட்டக் கொல்லி, ஆனைசெத்தகொல்லி பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'அப்பகுதியில் சுருக்கு கம்பி அல்லது வேறு வகையில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் வகையில், வன ஊழியர்கள் மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், சுருக்கு கம்பிகள் வைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி