உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டத்தில் மூன்று சிறுத்தை குட்டிகள்; பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை

தோட்டத்தில் மூன்று சிறுத்தை குட்டிகள்; பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை

கோத்தகிரி, ; கோத்தகிரி ஒரசோலை அண்ணோடை பகுதி தேயிலை தோட்டத்தில், தாயை பிரிந்த மூன்று சிறுத்தை குட்டிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட, ஒரசோலை அண்ணோடை பகுதியில், டெய்லி தோட்டம் அருகே புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை பசுந்தேலை பறிக்க பெண் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, தேயிலை தோட்டத்தை ஒட்டி புதர் மறைவில் இரண்டு சிறுத்தை, ஒரு கருஞ்சிறுத்தை குட்டிகள் விளையாடி கொண்டிருந்ததை பார்த்த தொழிலாளர்கள், ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு வந்த மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, கட்டபெட்டு வனச்சகர் சீனிவாசன் தலைமையில், வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். 'குட்டிகளை தேடி, தாய் சிறுத்தை வரக்கூடும் என்பதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்,'என அறிவுறுத்தினர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் கண்காணிப்பு பணி நடக்கிறது. தாய் சிறுத்தை நிச்சயம் வரும் என்பதால் இப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம். தாய் சிறுத்தை வரவில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை