உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  வனத்தில் தொடரும் காட்டுத் தீ

 வனத்தில் தொடரும் காட்டுத் தீ

பந்தலூர்: பந்தலூர் அருகே பெருங்கரை மற்றும் அம்மன்காவு வனப்பகுதிகளில் தொடரும் காட்டுத் தீயால் வனப்பகுதிகள் எரிந்து பாதிக்கப்பட்டது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில், வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய நீரோடைகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அளவு குறைந்து, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. வனப்பகுதிகளிலும் புற்கள் காய்ந்து வருவதால், வன விலங்குகளும் உணவு தேடி இடம்பெயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில் வனப்பகுதிகளில் காட்டுத்தீயின் தாக்கமும் அதிகரித்து, காய்ந்த வனங்கள் கருகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பந்தலூர் அருகே பெருங்கரை, அம்புரோஸ் வளைவு, அம்மன்காவு வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவியுள்ளது. இதனால், வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன், வன விலங்குகளும் பாதிக்கப்பட்டது. வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களிலும், காட்டு தீ காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் மத்தியில் காட்டு தீயால் ஏற்படும் பாதிப்புகள், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் குறித்து வனத்துறையினர் வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி